முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பிரச்சனை தீர்க்க கிராமங்களுக்கு செல்வேன்-ஆர்.பி.உதயகுமார் உறுதி

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 15 - மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகளிடம் அனைத்து கிராமங்களுக்கு செல்வேன். போர்கால அடிப்படையில் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவேன் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சருமான ஆர்.வி.உதயகுமார் கிராமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமைச்சரான பின்பு அவர் சாத்தூர் தொகுதி முழுவதும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த 3 தினங்களாக சாத்தூர் ஒன்றிய சில பகுதிகளிலும் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பல பகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அவர்கள் வழங்கிய மனுக்களை பெற்று வருகிறார். வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் சில கிராமங்களுக்கு செல்லும்போது நள்ளிரவு ஆகிவிட்டது. ஆனாலும் கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த கிராமங்களில் காளியம்மன் கோயில் அதிகளவு உள்ளன. இந்த கோயில்களில் அமைச்சருக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு மனுக்கள் தரப்பட்டன. அதனை பெற்ற அமைச்சர் அதிகாரிகளுடன் கிராமங்களுக்கு நேரில் வந்து உங்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார். இந்த ஒன்றிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும். சிமெண்ட் தாராளமாக  அனைவருக்கும் கிடைக்கவும், ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை நவீனப்படுத்தப்பட்ட உள்ளது. இந்த பணிக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா 165 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த ஆலையின் சிமெண்ட் உற்பத்தி 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்ந்துவிடும். இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு பிரச்சனையும் குறையும். தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த அமைச்சரும் வந்ததில்லை. முதன்முறையாக அமைச்சர்ஆர்.வி. உதயகுமார் வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் எங்களை சந்தித்து நன்றி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறோம் என பொது மக்கள் தெரிவித்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமைச்சருடன் சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், முன்னாள் அமைப்பு செயலாளர் விநாயமூர்த்தி, சக்தி கோதண்டம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முருகையா பாண்டியன், சுப்புராம், வாசன், வக்கீல் முருகன், கெளரி நாகராஜான், சாத்தூர் வேலாயுதம், அம்மா பேரவை முனீஸ், இளைஞர் அணி சண்முகக்கனி, கேபிள் கண்ணன், சாமி, சுப்புலெட்சுமி, ராமராசு, தாசன், அழகுராஜ், கடம்பாறைராஜ், காசிபாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், ஆலங்குளம் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை ராமராசு, செவல்பட்டி முருகன்,முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், அண்ணா பேரவை தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்