முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உதவி துணைத்தூதர் மன்னிப்பு கேட்கவேண்டும்-ஜெயலலிதா

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.- 15 - அனைத்து தமிழர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமெரிக்க உதவி துணைத் தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தி உள்ளார்.  முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜெனிபர் மிக்இன்டைருக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது,  அமெரிக்க உதவி துணை தூதர் மவுரின்சாவ், எஸ்.ஆர்.என். பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. அதில் நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால் 72 மணி நேரமாகியும் ஒரிசா போய் சேரவில்லை. அதனால் எனது சருமம் தமிழர்களை போல அழுக்காகவும், கறுப்பாகவும் மாறி விட்டது என்று மவுரின்சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்த பேச்சு கண்டனத்துக்குரியது. 

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே இந்த கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு தமிழர்களை பற்றிய இத்தகைய கருத்துக்களை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரின்சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்