முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டை கொத்தாளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.- 16 - 65-வது ஆண்டு சுதந்திர தினத்தில்  சென்னை கோட்டை கொத்தாளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொட்டியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை காலை 9.14 மணிக்கு போர் நினைவுச்சின்னம் அருகே  சென்னை காவல் துறையினர் சீருடை தரித்து இருசக்கர வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டையின் நுழைவு வாயிலுக்கு   அழைத்து வந்தனர். இதனையடுத்து காலை 9.17 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா  கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு  வந்தபோது  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். தமிழக அரசின் தலைமை செயலாளர்  தேவேந்திரநாத் சாரங்கி அரசு அதிகாரிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 

மேஜர் ஜெனரல் என்.எஸ்.ஜம்வால், வி.எஸ்.எம்., ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமை படைத்தலைவர், கமோடர் ராஜிவ் ஜிரோத்ரா  வி.எஸ்.எம்., கடற்படை பொறுப்பு அதிகாரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,  ஏர் கமோடர் சஞ்சய் சர்மா விமானப்படை அதிகாரி, தாம்பரம், இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்ய பிரகாஷ் சர்மா பி.எம்.எம்., டி.எம்., கடலோரக்காவல் படைத்தலைவர், கிழக்கு மண்டலம்,  கு.இராமானுசம், காவல் துறை இயக்குனர்,  எஸ்.ஜார்ஜ், காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி ஆகியோர் இடம்பெற்றனர். 

பின்னர் முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலாளர் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு அழைத்துச் சென்றார். காலை 9.19 மணிக்கு காவல் துறையினர் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அணிவகுப்புத் தலைவர் அவரது குழுவினர் பார்வையிட தயார் நிலையில் இருப்பதை தெரிவித்தபோது, முதல்வர் ஜெயலலிதா திறந்தவெளி ஜீப்பில்  ஏறி காவல் துறையினர் அணி வகுப்பினை பார்வையிட்டார்.

காலை 9.25 மணிக்கு அணிவகுப்புத்தலைவர்  கோட்டையின் நுழைவு வாயில் அருகே வாகனத்திலிருந்து இறங்கி  தனது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொண்டு அவரது குழுவோடு இணைந்து கொண்டனர். 

பின்னர் காலை 9.29  மணி முதல்வர் ஜெயலலிதா கோட்டை கொத்தளத்திற்கு சென்று காலை 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து , கொடிக்கு வணக்கம் செலுத்தினர். நாட்டுப் பண் இசைக்கப்பட்டது. பின்னர் காலை 9.32 மணிக்கு  முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரை நிகழ்த்தினர். காலை 9.47 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கோட்டை கொத்தளத்திலிருந்து துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்   மரு.ச.சங்கீதாவுக்கு வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான விருதுகள்:

1.சிறந்த மருத்துவர் விருது மரு.இரா.துரைசாமி, ஆவடி, சென்னை.

 2. சிறந்த சமூகப் பணியாளர் ப்ரியா தியோடர்  விழி இழந்த மகளிர் மறுவாழ்வு இல்லம்  மன்னார்புரம் திருச்சிராப்பள்ளி.

3. சிறந்த தொண்டு நிறுவனம் பிஷப் சார்ஜெண்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி பாளையங்கோட்டை திருநெல்வேலி.

4. அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் பி.பொன்னுதுரை, லயன் டேட்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், திருச்சிராப்பள்ளி.

5. சிறந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மு.ஜெயசீலி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், தேனி மாவட்டம்.

6. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக  வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. 

மகளிர் நலனுக்காக சிறப்பாகா தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளர்களு க்கான விருதுகள்:

1.சிறந்த தொண்டு நிறுவனம் (மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக) கிராம வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனம், அரியூர், வேலூர் மாவட்டம் (தலைவர் பி.கே.மணியன்).2. சிறந்த சமூகப்பணியாளர் விருது (மகளிருக்காக சிறப்பாகப் பணியாற்றியதற்காக) எ.பரிபூரண லில்லி, திட்ட இயக்குனர், ரெகோ, புதுக்கோட்டை ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

காலை 9.52 மணிக்கு அணிவகுப்புத் தலைவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கங்கள் தெரிவித்துக் கொண்டு தமது குழு வரிசையாக திரும்பிச் செல்ல அணுமதி கோரினார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா விருது பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு காலை 9.55 மணி கோட்டையின் உள்நுழைவு வாயில் அருகே உள்ள பந்தலுக்கு வந்தனர். காலை 10.00 மணிக்கு  பந்தலில் அமர்ந்துள்ள குழந்தைகளுக்கு இனிப்புப் பொட்டலங்களை வழங்கினார். ஜெயலலிதா முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையின் வெளிவாயில் வழியாக அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்