முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சகாயம் தேசியக்கொடி ஏற்றினார்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 16 - மதுர மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தியாகிகளை கெளரவிக்கும் வகையில் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் 200 -க்கும் மேற்பட்ட சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் பொன்னாடை அணிவித்து கெளரவித்து நினைரு பரிசு வழங்கினார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் சகாயம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கலந்து கொண்ட 200 தியாகிகளை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் கலெக்டர் சகாயம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம், மூன்று சக்கரவண்டி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 201 பேர்களுக்கு மொத்தம் ரூ.35 லட்சத்து33 ஆயிரத்து 915 வழங்கினார். சிறந்த முறையில் பணியாற்றிய அரசுதுறை அதிகாரிகள் 16 பேருக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது. காந்தி,நேரு, பாரதியார் மற்றும் விழாவில் கலந்து கொண்ட தியாகிகளின் படங்கள் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இவ்விழாவில் காவல்துறையின் அணிவகுப்பும், நேரு மேல்நிலைப்பள்ளி, தபால்தந்தி நகர் ஓ.சி.பி.எம். மக்ளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி சுந்தரேஸ்வர் மகளிர்மேல்நிலைப்பள்ளி, கேப்ரன்ஹால் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம், மீனாட்சி மகளிர் கல்லூரி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு நடைபெறறன.  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 1870 மாணவ ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
 விழாவில் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி.அஸ்ராகார்க், எம்.எல்.ஏ.அண்ணாத்துறை, வருவாய்துறை அதிகாரி முருகேஷ், திட்ட அதிகாரி சாமுவேல், இன்பதுறை, மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செல்வராஜ், மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ்,மாற்றுத் திறனாளி நல அலுவலர் கனகராஜ் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்