முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தையும் தாண்டியது

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.19 -  தங்கத்தின் விலை உயர்வை நினைத்தால் தாய்மார்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ஒரே நாளில் ரூ. 140 உயர்ந்தது. இதையடுத்து ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ. 20 ஆயிரத்தையும் தாண்டி விட்டது. நேற்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 20,032 ஆக இருந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 17 ஆயிரமாக இருந்தது. பிறகு மாதத்திற்கு ஆயிரம் வீதம் உயர்ந்து தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 20 ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இந்த கடுமையான விலை உயர்வால் தாய்மார்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இனிமேல் தங்கம் என்று பேப்பரில்தான் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை வாங்குவது கடினம் என்று தாய்மார்கள் கண்ணீர் வடிக்க வேண்டும். 

இந்த நிலையில் நேற்று ஆவணி மாதம் பிறந்துள்ளது. விரைவில் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரப்போகின்றன. மேலும் ஆவணி, ஐப்பசி போன்ற மாதங்களில் திருமணமும் அதிகம் நடக்கும். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். அப்போது மேலும் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தாய்மார்கள் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் மத்திய அரசோ, அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி என்று எதையாவது சொல்லி விலையுயர்வை நியாயப்படுத்துகிறது. தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. இனிமேலும் எடுப்பதாக தெரியவில்லை. பாவம் தாய்மார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago