முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்துக்கு 57 பயிற்சி விமானங்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.19 - இந்திய விமானப் படை, கப்பற்படைக்கு 57 ஜெட் பயிற்சி விமானங்கள் வரும் 2016 ம் ஆண்டுக்குள் வாங்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது, மொத்தம் 57 பயிற்சி விமானங்கள் தயார் செய்து அளிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2010 ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது. இவற்றில் 40 இந்திய விமான படைக்கும், மற்றவை கப்பற் படைக்கும் அளிக்கப்படும். இப்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் 2013 ம் ஆண்டு முதல் இந்த பயிற்சி விமானங்கள் வாங்கும் பணி தொடங்கும். 2016 ம் ஆண்டு முழுவதுமாக பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே கடந்த 2004 ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 24 ஹாக் ரக பயிற்சி விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஜூலை வரை 28 விமானங்கள் வாங்கப்பட்டு விட்டன. எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருக்கும் வகையில் உள்நாடு மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கான பல்வேறு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன என்றார். 

மேலும் கடந்த 2004 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ராணுவ தளவாடப் பொருட்கள் இந்தியாவுக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்