முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது முறையாக தொடரில் 3 சதம் - டிராவிட் சாதனை

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 23 - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தடுப்பு சுவரான டிராவிட் ஒருவர் மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற பேட்ஸ் மேன்கள் அனைவரும் சொதப்பி விட்டனர். இங்கிலாந்துக்கும், டிரா விட்டுக்கும் தான் இந்த டெஸ்ட் தொடர் என்று கூட சொல்லலாம். ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய டிராவிட் அபாரமாக விளையாடி 146 ரன் எடு த்தார். இது அவரது 33 -வது சதமாகும். 

இதன் மூலம் அதிகம் சதம் அடித்தவர்கள் பட்டியலில் டெண்டுல்கர் (51), காலிஸ் (40), பாண்டிங் (39), ஆகியோருக்கு அடுத்த நிலையில் டிராவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த டெஸ்ட் தொடரில் டிராவிட் அடித்த 3 -வது சதம் இதுவாகும். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 103 ரன்னும் நாட்டிங் ஹாமில் நடந்த 2 - வது டெஸ்டில் 117 ரன்னும் எடுத்தார். 

2002 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் டிரா விட் இதே மாதிரி 3 முறை (4 டெஸ்ட்) சதம் அடித்து இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 2 முறை 3 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டிராவிட் படைத்தார். 

அவர் பிராட்மேனை சமன் செய்தார். பிராட்மேன் இதற்கு முன்பு இங் கிலாந்துக்கு எதிராக 2 முறை 3 சதம் அடித்து இருந்தார். 1930 -ம் ஆண் டு 5 டெஸ்டில் 4 சதமும், 1938 -ம் ஆண்டு 4 டெஸ்டில் 3 சதமும் அடித்து இருந்தார். 

தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த 3 -வது இந்திய வீரர் டிராவிட்  ஆவார். 1983 -ம் ஆண்டு பாகி ஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் கவாஸ்கர் 127 ரன்னும், 2008 -ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக காலேயில் சேவாக் 201 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டிராவிட் 146 ரன் எடுத் து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

டிராவிட் வெளிநாட்டு மைதானத்தில் அடித்த 21 -வது சதம் இதுவாகு ம். அவர் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, உள்ளார். டெண்டுல்கர் 29 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 

வெளிநாட்டு மைதானங்களில் அதிக சதம் அடித்த டாப் 5 வீரர்கள் விபரம் வருமாறு - டெண்டுல்கர் 102 டெஸ்டில் விளையாடி 29 சதம் அடித்து இருக்கிறார். மொத்தம் 8,327 ரன்னை எடுத்து இருக்கிறார். 

டிராவிட் 90 டெஸ்டில் விளையாடி 21 சதம் அடித்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா வீரர் காலிஸ் 68 டெஸ்டில் விளையாடி 19 சதம் அடித்து இருக்கிறார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 5,522 ஆகும். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 60 டெஸ் டில் விளையாடி 18 சதம் அடித்து இருக்கிறார். அவர் அடித்த மொத்த ரன்கள் 5,055 ஆகும். ஆஸி. அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 69 டெஸ்டில் ஆடி 18 சதம் அடித்து இருக்கிறார். அவர் எடுத் த மொத்த ரன்கள் 5,460 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்