முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து பூட்டியா ஓய்வு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 25 - சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பைச்சுங் பூட்டியா ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த வர். கோல் அடிப்பதில் தேர்ச்சி பெற்றவர். இத்துடன் அவரது 16 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய கால்பந்து கழகத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தின் போது, பைச்சுங் பூட்டியா தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். 

34 வயதான பூட்டியா பந்தை கடத்தி நேர்த்தியாக கோல் அடிப்பதில் சிறந்த வீரராவார். இதன் அடிப்படையில் அவர் சிக்கிமிஸ் ஸ்னைப்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். 

மேலும், எனது 16 ஆண்டு கால சர்வதேச கால்பந்து வாழ்க்கை மிகவு ம் சிறப்பாக இருந்தது. நாட்டிற்காக பங்கேற்ற ஒவ்வொரு போட்டியி லும் நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். தவிர, அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடினேன் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்திய யு - 23 அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து அடுத்த மாதம் ஆட இருந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் யு - 23 அணியுடனும்ஆட இருந்தது. இந்திய அணியில் இடம் பெற்று இருந்த பூட்டி யா கடைசி நேரத்தில் விலகினார். 

இதனைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெறலாம் என்ற வதந்தி கிளம்பிய து. கடந்த ஒரு வருட காலமாக பைச்சுங் காயத்தினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப் பை போட்டியில் அவர் 15 நிமிட நேரம் மட்டும் விளையாடினார். 

கடந்த 27 வருட காலத்தில் இந்திய அணி பங்கேற்ற கெளரவமிக்க போட்டியாக ஆசிய கோப்பை போட்டி கருதப்பட்டது. ஆனால் பூட்டியா அப்போது முழு உடல் தகுதி பெறாததால் சரியாக ஆட முடிய வில்லை. 

2008 -ம் ஆண்டு நடைபெற்ற ஏ.எப்.சி. சேலஞ்ச் கோப்பை போட்டியி ல் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. இதில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. 

எனவே ஏ.எப்.சி. சேலஞ்ச் கோப்பை போட்டி எனது கால்பந்து வாழ் க்கையில் முக்கிய போட்டியாக இடம் பெற்றது. இந்தப் போட்டி முடிந்த பிறகு, நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன் என்றும் பைச்சு ங் கூறினார். 

ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் நான் 15 நிமிட நேரம் தான் விளையாட முடிந்தது. எனவே தற்போது ஓய்வு பெறக் கூடாது என்று நினைத்தேன். நான் தொடர்ந்து விளையாட நினைத்தேன். ஆனால் கடந்த 7 - 8 மாதங்கள் காயங்கள் என்னை மிகவும் பாதித்தன. எனவே ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்றும் பூட்டியா தெரிவித் தார். 

2014 -ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங் கேற்கும் இந்திய அணித் தேர்வு நடைபெற்றது. இதில் இந்திய அணிக் காக பூட்டியா தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்