முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காம்பீர்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 26 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்து நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான கெளதம் காம்பீர் பங்கேற்க இருக்கிறார். அவருக்கு காயத்தால் பாதிப்பு இல்லை என்று தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4 -வது டெஸ்ட் போட்டி கடந்த வாரம் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் காயம் காரணமாக காம்பீர் வரிசை மாற்றி இறக்கப்பட்டார். 

எனவே இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டிக்கு அவர் தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு தற் போது விடை கிடைத்து இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெளதம் காம்பீர். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியி ல் பீல்டிங்கின் போது இவர் காயம் அடைந்தார். 

பீட்டர்சன் அடித்த பந்தை பின்பக்கமாக பிடிக்க சென்ற போது, அவர் நிலை தடுமாறி பின்பக்கமாக கீழே விழுந்தார். மைதானத்தில் விழுந் ததில் அவரது தலையின் பின்புற பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக 2 -வது இன்னிங்சில் அவர் கடைசி நேரத்தில் களம் இறங்கினார். இதைத் தொடர்ந்து காம்பீருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை மூலம் காம்பீருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்பது தெரிய வந்தது. 

எனவே காம்பீர் இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. அதிரடி தொடக்க வீரரான சேவாக் தோ ள்பட்டை காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் விளையாடவில் லை. 

இதனால் டெண்டுல்கரும்,காம்பீரும் ஒரு நாள் தொடரில் துவக்க வீரர் களாக விளையாடுவார்கள். 4 -வது டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு நேற்று இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றனர். காம்பீ ர் இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை. 

இந்திய அணி 20 ஓவர் போட்டிக்கு முன்பு 3 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா - சசெக்ஸ் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் ஹோர்வே நகரில் நேற்று துவங்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு இந்தப் போட்டி துவங்கியது. 

இந்த பயிற்சி ஆட்டத்தில் காம்பீர் விளையாடமாட்டார். இதை தொ டர்ந்து இந்திய அணி கென்ட் அணியுடன் 26 -ம் தேதியும், லீசெஸ்டர் சைபர் கிளப்புடன் 29 -ம் தேதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற 31 -ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. அதன் பிறகு இரு அணிகள் இடையிலான 5 ஒரு நாள் போட்டி நடக்கிறது. செப்டம்பர் 3.6.9,11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 

இதில் 3 ஒரு நாள் போட்டிகள் பகல் இரவாக உள்ளது. இந்திய அணி 4 டெஸ்டிலும் மோசமாக தோற்றதால் ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago