முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவி: ஏ.சி. முத்தையா வழக்கு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 26 - இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை எதித்து ஏ.சி. முத்தையா உச்சநீதி மன்றத்தில் மனுத் தா க்கல் செய்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருப்பவர் சஷாங்க் மனோ கர். இவரது பதவி காலம் முடிவடைகின்றது. இதையடுத்து புதிய தலைவராக என். சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் அடுத்த மாதம் பொறுப்பேற்கின்றார். 

இதை எதிர்த்து முன்னாள் தலைவர் ஏ.சி. முத்தையா உச்ச நீதிமன்றத்தி ல் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது சார்பில், வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

என். சீனிவாசன் தற்போது, கிரிக்கெட் வாரிய செயலாளராக உள்ளா ர். அதே நேரத்தில் ஐ.பி.எல். சென்னை அணியின் உரிமையாளராகவு ம் இருக்கிறார் என்பது நினைவு கூறத்தக்கது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உட்பட்ட ஐ.பி.எல். அணிக்கு உரி மையாளராக இருக்கும் ஒருவர் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருப் பது ஏற்புடையது அல்ல என்று ஏ.சி.முத்தையா சார்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

அவரது மனுவை, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகி யோர் விசாரித்தனர். சீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக் கு வருவதை தடுக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். 

ஆனால், இந்த விவகாரத்தில் தீர்வு காண தலைமை நீதிபதியை அணு குமாறு உத்தரவிட்டார்கள். அதன் படி, ஏ.சி. முத்தையா, தலைமை நீதிபதி முன்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். 

ஏற்கனவே சீனிவாசன் செயலாளர் பதவியில் இருப்பதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் ஏ.சி. முத்தையா மனுத் தாக்கல் செய்ய இருந்தார்.  அந்த நேரத்தில் சீனிவாசனுக்கு சாதகமாக கிரிக்கெட் வாரியம் தீர்மா   னம் இயற்றி இருந்தது. 

இந்த மனுவை 2 நீதிபதிகள் விசாரித்தனர். ஒரு நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மற்றொரு நீதிபதி மனு வை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago