முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் கடும் சண்டை குண்டுவெடிப்பு: 50 பேர் பலி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி,மார்ச்.- 6 - லிபியாவில் அதிபர் கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 50 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். எகிப்தில் அதிபராக இருந்து கோஷினி முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டம் மாதிரி லிபியா நாட்டிலும் பயங்கர போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர். அதிபர் கடாபிக்கு எதிராக நடந்து வரும் இந்த போராட்டத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

லிபியாவின் பெரும்பகுதியை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்களை ஒடுக்க ராணுவத்தை அதிபர் கடாபி ஏவி வருகிறார். இதனால் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் கடாபி ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் இயந்திர துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொள்கின்றனர். மேலும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள லிபியாவின் கிழக்கு பகுதி மற்றும் தலைநகர் திரிபோலி ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்களை ஒடுக்க லிபியா ஆதரவாளர்கள் பல இடங்களில் குண்டுவெடித்தனர். இதில் 50 பேர் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள அஜ்-ஜவியா பகுதியில் அதிபர் கடாபி ஆதரவாளர்கள் தாக்குதலை கடுமையாக்கியுள்ளனர். இதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ராஸ் லனுப் துறைமுக நகரிலும் கடும் சண்டை நடந்து வருகிறது என்று அல் -ஜஜீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்