முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கேப்டன் தோனிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஆக.27 - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இங்கிலாந்தில் உள்ள டிமான்ட்போர்ட் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறது. வரும் 29 ம் தேதி நடைபெறும் லெய்செஸ்டெர்ஷையர் அணிக்கெதிரான ஒரு நாள் பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுகிறது. லெய்செஸ்டரில் உள்ள டி மான்ட்போர்ட் பல்கலைக் கழகத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி எம்.பி. கெய்த்வாஸ், தோனிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். 

தோனியின் சாதனைகளுக்கு கிடைத்த மிக சிறந்த கவுரவம் இந்த டாக்டர் பட்டம். உலகின் மிக சிறந்த கேப்டனான தோனியை கவுரவ டாக்டர் பட்டத்திற்கு தேர்வு செய்வதற்காக டிமான்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்திய அணி டெஸ்ட் போட்டியில் படு தோல்வி கண்டுள்ள நிலையில் டிமான்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இந்த அறிவிப்பு அவருக்கு ஊக்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்