முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஒரே நாளில் 72 பேருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்,செப்.- 2 - சிரியாவில் ஒரே நாளில் 72 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சட்டத்துறை தலைவர் அட்னன் முகமது பகோர் ராஜினாமா செய்துள்ளார். எகிப்து,லிபியா,ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடப்பது போல் சிரியா நகரிலும் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் 72 பேருக்கு ஒரே நாளில் அந்த நாட்டு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு காரணம் அதிபர் பஷார் அல்-சாத் மற்றும் அவரது ஆதரவு படையினரும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. 72 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு தலைமை சட்ட தலைவரான அட்னன் முகமது பகோர் தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அட்னனை சிரியாவின் புரட்சி படையினர் கடத்தி சென்றுவிட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. சிரியாவின் மத்தியப்பகுதி நகரான ஹமாவில் இருந்து பணிக்கு அட்னனை செல்லும்போது புரட்சி படையினர் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அட்னன் நேற்று பகோர் வீடியோவில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஜூலை 31-ம் தேதி அன்று ஹமா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 72 பேர் தூக்கில் போடப்பட்டனர் என்றும் அவர்களில் அமைதி வழியில் போராடியவர்களும் இருந்தனர் என்றார். பொது பூங்காக்களில் உள்ள கல்லறைகளில் 400-க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. அமைதியாக போராடியவர்கள் 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சித்ரவதையை தாங்காமல் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும் அட்னன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago