முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஏற்பட்ட பூகம்பம் அணு கண்டெய்னர்களை நகர்த்தியது

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 3 - அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு உலையில் வைக்கப்பட்டிருந்த அணுக்கழிவு கண்டெய்னர்களை நகர்த்தியது. ஆனால் அணு கதிர்வீச்சோ அல்லது கண்டெய்னர்களுக்கு சேதமோ ஏற்படவில்லை.  அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் அணு உலைகள் ஏராளமாக இருக்கின்றன. இவைகள் மூலம் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி அணு உற்பத்தியின்போது கழிவுப்பொருட்கள் வெளியாகும். அதிலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். மேலும் அணுக்கழிவில் இருந்து அணுகதிர்வீச்சும் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் கதிர் செல்லும் இடத்தில் எல்லாம் ஒரு புல்லு பூண்டு கூட இருக்காது. அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் அணு மின்சார நிலையங்களில் இருந்து வெளியாகும் கழிவுப்பொருட்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பூகம்பம், சுனாமி வீசும்போது அணுஉலைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்கியதில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஒரு அணு உலை பாதித்தது. இதனால் அதில் இருந்து அணுக்கதிர் வீசியதால் அருகில் வசித்த மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக அவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் ஜப்பான் பிரதமர் ராஜினாமா செய்துவிட்டார். அங்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே கதை அமெரிக்காவில் நடக்கவிருந்தது. சமீபத்தில் நியூயார்க் மற்றும் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் மையம் கொண்டியிருந்த வர்ஜீனியா மாகாணத்தின் மையப்பகுதி அருகே அணு உலை உள்ளது. பூகம்பம் ஏற்பட்டதில் அணுஉலையில் அணுக்கழிவு வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் நகர்ந்தன. நல்ல வேளையாக சேதம் ஏற்படவில்லை. அப்படி சேதம் ஏற்பட்டிருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலேயே இந்தமாதிரி என்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இயற்கை சீற்றத்தின்போது அணுஉலைகள் பாதிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்