முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் - பார்லி. கூட்டுக்குழு காலம் நீட்டிப்பு

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.7 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் காலம் அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பி.சி.சாக்கோ தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது விசாரணையை நாளையுடன் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாததால் பார்லி.யின் கூட்டுக்குழுக்காலம் அடுத்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று சாக்கோ ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நாளையுடன் முடிக்க முடியாது. அதனால் அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தின் இறுதி நாள் வரை விசாரணை காலத்தை நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தீர்மானம் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. இந்த குழுவில் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அமலாக்கப்பிரிவு,சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் ஆகியோர்களிடம்தான் விசாரணை நடத்தியுள்ளது. மேலும் தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள், டிராய்  முன்னாள் தலைவர், முன்னாள் அட்டர்ஜி ஜெனரல் சோலி சொராப்ஜி,முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கடந்த 1998 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் லைசென்சுக்கு விலை நிர்ணயம் ஆகிய தொடர்பாக விசாரிக்க கடந்த மார்ச் மாதம் பாராளுமன்ற கூட்டுக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் லோக்சபை உறுப்பினர்கள் 20 பேரும் ராஜ்யசபை உறுப்பினர்கள் 10 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்