முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்துடன் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உத்தரவு

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.8  - இந்தியா-வங்ததேசம் இடையே ஏற்பட்டுள்ள தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வழிமுறைகளை காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாட்கள் பயணமாக வங்கதேசம் சென்றுவிட்டு நேற்று திரும்பினார். அவரின் இந்த அரசுமுறை பயணத்தின்போது இருநாடுகளுக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தகங்கள் கையெழுத்தாகின. இருநாடுகளிடையே நதிநீர் பங்கீடு குறித்து தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தமும் பிரதமரின் இந்த பயணத்தின்போது இருநாடுகளிடையே ஏற்பட இருந்தது. இந்த ஒப்பந்தத்தால் மேற்குவங்க மாநிலத்திற்கு கிடைக்கும் தண்ணீர் அளவு குறையும் என்றும் இதுதொடர்பாக மேற்குவங்க அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். மேலும் பிரதமருடன் அவர் வங்கதேசத்திற்கு செல்லவில்லை. அதனால் அந்த ஒப்பந்ததம் மட்டும் கையெழுத்தாகவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வழிவகைகளை காணும்படி மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்