முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக ஐகோர்ட்டில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,செப்.9 - டெல்லி ஐகோர்ட்டு முன்பு தீவிரவாதிகள் குண்டுவெடித்ததையொட்டி கர்நாடக ஐகோர்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி கேஹர் நேற்று மாநில உள்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் அதுவும் மக்கள் நடமாட்டம் எப்போதும் உள்ள ஐகோர்ட்டு முன்பு தீவிரவாதிகள் குண்டுவெடித்திருப்பதால் நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநில ஐகோர்ட்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நிதிபதி கேஹர் நேற்று பெங்களூரில் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.அசோக், பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மீர்ஜி மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஐகோர்ட்டு மற்றும் பெங்களூர் நகரில் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள சட்டசபை கட்டிடத்திற்கு அருகில் ஐகோர்ட்டு உள்ளது. ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் ஐகோர்ட்டு அனைத்து நுழைவாயில்களிலும் சோதனையை பலப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அசோக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்