முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபை கூட்டம் ஒத்திவைப்பு: சபாநாயகர் வருத்தம்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.9 - பாராளுமன்ற லோக்சபை கூட்டத்தை சபாநாயகர் மீரா குமார் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அப்போது அவர் வருத்தப்பட பேசினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் கூடியது. கூட்டத்தில் விலைவாசி உயர்வு, குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைத்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம், அண்ணா ஹசாரே விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் பாராளுமன்ற இருசபைகளிலும் அடிக்கடி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பல முறை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற லோக்சபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்தது. கூட்டத்தை முடித்துவைத்து பேசிய சபாநாயகர் மீரா குமார், சபையில் அடிக்கடி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபையை ஒத்திவைக்க நேர்ந்தது. இதனால் சபை நேரம் சுமார் 51 மணி நேரம் வீணாகப்போய்விட்டது. எதிர்காலத்தில் சபையின் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் அமைதி காத்து சபை நேரம் முழுவதும் நடக்க உதவுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். 

லோக்சபையில் பிரிவு உபச்சார விழா நேற்று மதியம் 12.55 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் நாடு திரும்பியுள்ளார். அவர் பூரண குணமடைய நாம் எல்லோரும் இறைவனை வேண்டிக்கொள்வோம் என்றும் மீரா குமார் உருக்கத்துடன் கூறினார். லோக்சபை நடந்த 26 நாட்களில் 104.03 மணி நேரம் நிகழ்ச்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 11 மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டன. 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 500 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் 51 கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லப்பட்டது என்று மீரா குமார் வருத்தத்துடன் கூறினார். இந்த சபை கூட்ட நேரத்தில் 51 மணி நேரம் 6 நிமிடங்கள் வீணாகப்போய்விட்டது. இதை தடுத்து பாராளுமன்ற ஜனநாயகத்தை ஊக்கவிக்க ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று மீரா குமார் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்