முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கைது

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், செப். 10 - பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் நேற்று காலை பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கன்னட திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் தர்ஷன். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தனது தோழி திவ்யா என்பவரின் வீட்டில் விஜயலட்சுமி தங்கியிருந்தார். அந்த வீட்டிற்கு சென்ற நடிகர் தர்ஷன் தனது மனைவியை தனது வீட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த வேண்டுகோளை விஜயலட்சுமி நிராகரித்தார். இதையடுத்து விஜயலட்சுமியை தர்ஷன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பெங்களூர் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். தனது கணவர் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தர்ஷன் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். தர்ஷன் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழும், கொலைமுயற்சி பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்ஷனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் தர்ஷனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அவரது மனைவி விஜயலட்சுமி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கன்னட திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago