முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு விஷயங்களில் ஹசாரேவை எனக்கு பிடிக்கும்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

குணா, செப்.10 - அன்னா ஹசாரேவை கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், தற்போது இரண்டு விஷயங்களில் அவரை தமக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய்சிங் குணா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். டெல்லி ஐகோர்ட்டில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த அடிப்படை வாதிகளாக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். 

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்று கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்ற பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே பற்றி கேட்டதற்கு அந்த காந்தீயவாதி மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக திக்விஜய்சிங் கூறினார். இரண்டு விஷயங்களுக்காக அவரை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கறுப்பு தொப்பி அணிவதற்கு பதிலாக வெள்ளை தொப்பியை அணியவைத்த பெருமை அன்னா ஹசாரேவையே சேரும். இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ். காரர்கள் காவிக் கொடியை கையில் ஏந்துவதற்கு பதிலாக அவர்களை மூவர்ண தேசிய கொடியை ஏந்த வைத்த பெருமையும் அன்னாவையே சேரும். எனவே இந்த இரண்டு விஷயங்களிலும் அவரை எனக்கு நிரம்பப் பிடிக்கும் என்றும் திக்விஜய்சிங் கூறினார். 

அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முகமூடி என்று நான் ஒருபோதும் சொன்னதே இல்லை என்றும் திக்விஜய்சிங் கூறினார். அமர்சிங் பற்றி கேட்டதற்கு அவர் மீது  மிகுந்த இரக்கம் கொண்டுள்ளதாக  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago