முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு: துப்புக் கொடுத்தால் வெகுமதி

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.10 - டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசாருக்கு துப்புக் கொடுக்கும் எவருக்கும் ரூ. 5 லட்சம் வெகுமதி தரப்படும் என்று தேசிய புலனாய்வுக் கழகம் அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளவரா, இல்லையா என்று தெரியவில்லை என்றாலும் பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏ.டி.எம். அட்டையை திருடி பயன்படுத்தியதற்காக போலீசார் அவரை காவலில் வைத்து விசாரிக்கின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக அவருக்கு தொடர்பு இருப்பதாக சில விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அவரிடம் விசாரணை நடக்கிறது.

டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் பயன்படுத்திய கார் என்ற சந்தேகத்தின் பேரில் கேட்பாரற்று கிடந்த ஒரு கார் கைப்பற்றப்பட்டது. ஆனால் அதன் மூலம் யூகம் தவறு என்று பின்னர் தெரிந்தது. அந்த காருக்கும், குண்டு வெடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். டெல்லி போலீஸ் அதிகாரிகளும், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்தனர். ஐகோர்ட்டில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்