முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் தற்கொலைகள் அதிகரிப்பு

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,செப்.10 - சீனாவில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சீனாவில் தற்கொலை முயற்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் சீனர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இதில் 2.87 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். இது சீனாவின் மொத்த இறப்பு விகிதத்தில் 3.6 சதவீதமாகும். 

75 சதவீத தற்கொலைகள் கிராப்புறத்தில் நிகழ்கின்றன. தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களை விட பெண்கள் 25 சதவீதம் அதிகம். இது வளர்ந்த நாடுகளில் இருந்து முரண்படும் அம்சமாகும். வளர்ந்த நாடுகளில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். சீனாவில் நிகழும் இறப்புகளுக்கான காரணங்களில் தற்கொலை 5 ம் இடம் பெறுகிறது. 15 முதல் 34 வயதுடையவர்களின் மரணங்களுக்கு தற்கொலையே பிரதான காரணமாக உள்ளது என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்