முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலனாய்வுக் குழுக்களை பலப்படுத்த வேண்டியுள்ளது: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.11 - தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் புலனாய்வுக்குழுக்களை மேலும் பலப்படுத்த வேண்டியிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளை ஒடுக்க புலனாய்வுத்துறை அமைப்புகளையும் உளவுத்துறை அமைப்புக்களையும் மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

மேலும் இது போன்ற சவால்களை சமாளிக்க  புலனாய்வு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய உளவு தொகுப்பு பன்முக புலனாய்வு மையம் போன்றவை அமைக்கப்பட்டு அவற்றுடன் பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் உளவு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எங்கெல்லாம் உளவுத்தகவல்களுக்கான ஆதாரங்கள் உள்ளனவோ அவற்றுடன் தொடர்பு கொண்டு புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு நடவடிக்கை மேற்கொண்டால்தான் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளை ஒடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

புலனாய்வு மற்றும் உளவு அமைப்புக்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நக்சல் தீவிரவாதத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பகுதிகளில் அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக பின் தங்கிய பகுதிகளில் இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த சவால்களை சமாளிக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கிடையிலேயும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீவிரவாதம், நக்சல்வாதம் மட்டுமல்ல இந்த கவுன்சில் கூட்டத்தில் நிகழ்ச்சி குறிப்பில் உள்நாட்டு கிளர்ச்சி படைகள் குறித்த பிரச்சினையும் கூட  சேர்க்கப்பட்டுள்ளது.

தீவிரவாதம் நக்சல்வாதம் போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சில பொது மக்கள் பிரச்சினைகளும் எழுகின்றன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதிகமாக கூடியிருக்கும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்கும் போது உயிருக்கு  ஆபத்து ஏற்படாத முறைகளை கையாள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago