முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான கொள்முதல் முடிவில் தவறில்லை: அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.11 - இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களையும் இணைப்பது என்ற முடிவிலும் 111 விமானங்களை கடனில் வாங்குவது என்ற முடிவிலும் தவறு ஏதுமில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். 

விமான போக்குவரத்து துறை நெருக்கடிகளை சந்தித்ததற்கு வாஜ்பாய் அரசுதான் காரணம். அந்த அரசு மேற்கொண்ட அரசு நிறுவன பங்குகளை விற்கும் முடிவு வெற்றிகரமாக செயல்படாததால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது விமான போக்குவரத்து துறையையும் பாதித்துள்ளது. புதிய விமானங்களை வாங்குவதற்கான நடைமுறையை மேற்பார்வை பார்க்கும் பணி முன்னாள் சி.ஏ.ஜியான சி.ஜி. சோமய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதிகாரம் பெற்ற மத்திய அமைச்சர்கள் குழுவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவும் கண்காணித்தன. 

இரு நிறுவனங்களையும் ஒன்று சேர்ப்பது என்ற முடிவை எடுத்த போது இரு நிறுவனங்களின் வரவு, கடன் ஆகிய அனைத்துமே அரசுக்கு தெரிந்திருந்தது. விமான போக்குவரத்து நிறுவனங்களை இணைத்த உடனேயே நிர்வாகத்தை சீரமைக்க அரசில் பரிகார நடவடிக்கைகளையும் எடுத்தது. அவை இப்போதும் தொடர்கின்றன. எனவே நிர்வாகத்தில் அரசு அக்கறையாக இல்லை என்பது போன்ற தொனி சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்