முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என்பதே பா.ஜ.க.வின் கொள்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.11 - அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என்பதே பா.ஜ.க.வின் கொள்கை என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். டெல்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, ஷானவாஸ் ஹூசேன் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய சிதம்பரம், தேசத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து தேசத்தை காக்கும் வகையில் முடிவை எடுக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியுடன் ஒத்துழைக்கும் குணமே பா.ஜ.க.விடம் இல்லை. நமது நாடு அண்டை நாடுகளால் பல்வேறு பயங்கரவாத பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பயங்கரவாத மையங்களாக உள்ளன என்றார். உடனிருந்த பவன்குமார் பன்சால் கூறும் போது, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 140 மணி நேரம் அவையை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வினரின் அமளி காரணமாக சபை 66 மணி நேரம் வீணானது. எந்த விஷயமானாலும் அதை பேசி தீர்க்கலாம் என்று பலமுறை கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் அமளி செய்து அவையை முடக்குவது மூலம் பா.ஜ.க. தாங்கள் வெற்றி பெற்றதாக எண்ணி புழகாங்கிதம் அடைந்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்