முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு: ராஜஸ்தானில் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,செப்.11 - டெல்லி ஐகோர்ட்டு முன்பு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள ஐகோர்ட்டு முன்பு கடந்த புதன்கிழமை அன்று தீவிரவாதிகள் குண்டுவெடிக்க செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சந்தேகப்படும்படி திரிந்த 2 பேர்களின் மாதிரிப் படங்களை புலனாய்வு அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மாதிரி ராஜஸ்தானில் திரிந்த 2 பேர்களை போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த பேரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஜெய்பூர் நகரில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்தில் ஆழ்வார் நகரம் உள்ளது. இங்குள்ள கிஷங்ஹார் பகுதியில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்குவதற்காக இவர்கள் இருவரும் இடம் கேட்டுக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்ததால் மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள இரண்டு மாதிரி படங்களை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அதேமாதிரி இவர்கள் இருந்ததால் போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்தனர் என்று தன் பெயரை வெளியே கூற விரும்பாத ஒரு உயரதிகாரி தெரிவித்தார். அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகளும் நேற்று ஆழ்வார் நகருக்கு வந்துள்ளனர். அந்த 2 பேர் மீது மேலும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் டெல்லிக்கு அழைத்து செல்லப்படலாம் என்று தெரிகிறது. ஆழ்வார் நகர் வழியாக செல்லும் ஜெய்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்