முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.11 - டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தை பல்வேறு மாநில முதல்வர்கள் புறக்கணித்து விட்டார்கள். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் போன்றவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்த முக்கிய முதல்வர்கள் ஆவர். இந்த ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவருக்காக மேடையில் ஒரு இருக்கையும் போடப்பட்டிருந்தது. ஆனால் அவரும் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. 

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், இதர மாநில முதல்வர்கள், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டத்தில் பேசுகையில், 

மக்களின் உணர்வுகளுக்கு மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதே நேரம் அரசியல் முடிவெடுக்கும் போது நீண்ட கால விளைவுகளை பற்றியும் மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தெலுங்கானா போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. 

 

தமிழ்நாடு பங்கேற்காதது ஏன்?

 

டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டத்தில் தமிழகம் சார்பாக யாருமே கலந்து கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதாவோ, அவரது அமைச்சரவை சகாக்களோ யாருமே பங்கேற்கவில்லை. காரணம், தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வரும் சரி, தமிழக அமைச்சர்களும் சரி, மும்முரமாக இருப்பதால் அவர்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. சட்டமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு மாநில அரசு தெரிவித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago