முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தலைமை நீதிபதியின் குடும்பத்தினருக்கு பலகோடி சொத்துக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 6 - சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

பாலகிருஷ்ணன் இப்போது தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராகவும் உள்ளார். அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்களை சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் மகள் ராணி, அவரது கணவர் பென்னி ஆகியோருக்கு சொச்சியில் ரூ 80 லட்சம் மதிப்பிலான நிலமும், ரூ 35 லட்சம் மதிப்புள்ள வணிக கட்டிடங்களும் உள்ளன. மற்றொரு மகள் சோனி, அவரது கணவர் பெயரில் கொச்சியில் மட்டும் 40 லட்சம் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. மேலும் பாலகிருஷ்ணனின் சகோதரர் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ 22 லட்சம் மதிப்பில் கொச்சியில் கட்டிடங்கள் உள்ளன. இது தவிர தமிழகத்தில் திண்டுக்கல்லிலும் அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உண்டு. 

இதே பாலகிருஷ்ணனின் மனைவி பெயரிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. பாலகிருஷ்ணன் சகோதரியின் மகன் அபிலேஷ் சந்திரனுக்கு கோட்டயத்தில் நகைக்கடை, பாலக்காட்டில் பாருடன் கூடிய ஓட்டல், 4 விலை உயர்ந்த கார்கள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்