முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் யுனிவர்ஸ் 2011 அங்கோலா நாட்டின் லைலா லோபஸ் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

சாவாபோலோ, செப்.- 14 - 2011 ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆக அங்கோலா நாட்டு அழகி லைலா லோபஸ் தேர்வு செய்யப்பட்டு முடிசூட்டப்பட்டார். 2011 ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி பிரேசில் நாட்டில் உள்ளசாவாபோலோ நகரில் நடைபெற்றது. இதில் உலக அளவில் 89 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அழகியான வாசுகி சங்கவாலி(26) கலந்து கொண்டார். முதல் சுற்றிலேயே ஐதராபாத்தை சேர்ந்த இந்திய அழகி வாசுகி வெளியேறினார். இதில் ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, பிரான்சு, உக்ரைன், போர்ச்சுக்கல், பனாமா, பிலிப்பைன்ஸ், அங்கோலா, சீனா, பிரேசில் ஆகிய 10 நாட்டு அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த சுற்றில் முதல் 5 இடங்களில் உக்ரைன், பிலிப்பைன்ஸ், சீனா, பிரேசில், அங்கோலா அழகிகள் தேர்வாகினர். இறுதி சுற்றில் உங்களிடம் உள்ள ஒரு பழக்கத்தை நீங்கள் மாற்றிக் கொள்வீர்களா? ஆம் என்றால் எந்த பழக்கம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிலளித்த அங்கோலா நாட்டுஅழகி லைலா, நான் என்னிடம் உள்ள எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் எனது குடும்பத்தினரிடம் இருந்து பல நல்ல காரியங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அதன் மூலம் எனக்கு என சில வாழ்க்கை தத்துவங்களை நிர்ணயித்துள்ளேன். இதனால் எனக்குள்ளான அழகை பெற்றுள்ளேன் என பதிலளித்தார். கடைசி 5 பேரில் சிறப்பான பதிலை அளித்து நடுவர்களிடம் பாராட்டை பெற்ற அங்கோலா நாட்டு அழகி லைலா, 2011 ம் ஆண்டின் மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்டு முடிசூட்டப்பட்டார். 2 ம் இடத்தை பிரேசில் நாட்டு அழகியும், 3 ம் இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டு அழகியும், நான்காம் இடத்தை சீனா நாட்டு அழகியும் பிடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்