முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாக திறமையில் நரேந்திர மோடி கில்லாடி: அமெரிக்கா

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 15 - இந்தியாவில் ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும். ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குஜராத் மாநிலம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே மிக சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவரை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இந்தியாவில் சிறந்த நிர்வாகம், மற்றும் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரியதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது. பிரதமர் பதவிக்கான பா.ஜ.க வின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்த போட்டிக்கு தானாகவே அவரது பெயர் வந்து விட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி உள்ள மோடி மீது 2002 ல் முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை ஒரு கறையாக நிற்கிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால் மோடி நிர்வாகத்தில் பெரிய கில்லாடிதான். ஊழலற்ற நிர்வாகம், நாட்டின் வளர்ச்சி பாதை ஆகிய அனைத்திலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மோடி விளங்குகிறார். மோடியின் சிறந்த ஆட்சி முறை இந்தியாவின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. உலக அளவில் முன்னணியில் உள்ள மோட்டார் தொழில் ஜாம்பவான்களை குஜராத் தன் பக்கம் இழுத்துள்ளது. மோடியை போலவே சிறந்த நிர்வாக திறமை கொண்டவராக நிதீஷ்குமார் உள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருபவர் நிதீஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் வெற்றியை பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார் உ.பி. முதல்வர் மாயாவதி. அவர்களை போலவே தானும் செயல்பட முயற்சி செய்து வருகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago