முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் எடையை குறைக்க கட்காரிக்கு அறுவைசிகிச்சை

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

மும்பை, செப்.- 15 - பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவரான நிதின் கட்காரிக்கு உடல் எடையை குறைப்பதற்காக மும்பை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மும்பை மருத்துவமனையில் கட்காரி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து மும்பை சாய்பி ஆஸ்பத்திரி தலைமை மருத்துவரை கேட்டபோது சிகிச்சை பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலாது என்று மறுத்துவிட்டார். எனினும் விடாமல் ஆஸ்பத்திரி வட்டாரங்களில் விசாரித்தபோது உடல் எடையை குறைப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என தெரிவித்தார்கள். கட்காரிக்கு சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும். அரசியலில் அவர் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மேலும் கூறினர். இதுகுறித்து பாரதீய ஜனதா வட்டாரத்தில் கேட்டபோது, கட்காரிக்கு சர்க்கரை நோய் உள்ளது. வழக்கமாக இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதித்துவிட்டு போவார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு விரைவில் சென்று விடுவார் என்று கூறினர்.
மகாராஷ்டிரா நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே நேற்று ஆஸ்பத்தரியில் கட்காரியிடம் நலம் விசாரித்து சென்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்