முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சைக்குப் பின் சோனியா பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்:

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.- 16 -உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். நியுயார்க் ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது. அங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை மேற்கொண்ட சோனியா டெல்லி திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். கட்சி விவரங்களை கவனிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  முதல் நிகழ்ச்சியாக அவர் டெல்லியில் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். தேர்தலை காங்கிரஸ் சந்திப்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்