முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். செப். - 16 - அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர் என்று ஒரு ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை என்று சொன்ன உடனே ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகள்தான் நம் நினைவுக்கு வரும். மேலும்  வறுமைக்கோடு என்ற சொற்கள் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் வறுமை என்று சொன்னால் நாம் திகைத்து பார்ப்போம். ஏனென்றால் அமெரிக்காதான் உலகில் பல நாடுகளுக்கு வறுமையை ஒழிக்க  நிதி  உதவிகளை  செய்து வருகிறது. ஆனால் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி அமெரிக்காவிலும் வறுமைக்கோட்டிற்கு கீழே  வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில்  ஆறில் ஒருவர் அதாவது  96 பேரில் 12 பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று  அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் சென்சஸ் பீரோ என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தி  அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு அந்நாட்டின் சரிவடைந்துள்ள பொருளாதார நிலையே காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2009 ம் ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக இருந்தது. ஆனால் அது  கடந்த 2010 ம் ஆண்டில் 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளாகவே வறுமை நிலை அதிகரித்து வருகிறது. கடந்த 2009 ல் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சம். இது  மேலும் அதிகரித்து 2010 ம் ஆண்டில் 4 கோடியே  62 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருமானம், வறுமை,சுகாதார காப்பீடு  போன்ற  அம்சங்களின் அடிப்படையில் இந்த சென்சஸ் எடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு  ஆண்டுக்கு   ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் இருந்தால் அது வறுமைக்கோடு என்று அந்நாட்டு அரசாங்கம் வரையறை  செய்துள்ளது. அதே சமயம் தனிநபர் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறுவோர்  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுகாதார காப்பீடு செய்யாதவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 1983 ம்ஆண்டு முதல் வறுமைகோடு வரையறுக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் அமெரிக்காவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு முதல் இப்போது வரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருவதாக சென்சஸ் பீரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago