முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் மோடி திட்டம்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

அமதாபாத்,செப்- .16 - குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலியானார்கள். இதில் முதல்வர் நரேந்திர மோடி மீதும் மந்திரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. கலவர வழக்கு தொடர்பாக மாநில அரசு தனியே விசாரித்து வருகிறது. இதற்கிடையே கலவர வழக்கில் மோடி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாக்ரியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர் கீழ்க்கோர்ட்டை அனுகலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதில் மோடி குற்றமற்றவர் போல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் மோடியும், பா.ஜ.க. வினரும் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா? என்றும் தலைவர்கள் யோசனையில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திர மோடிக்கு தற்போதுள்ள செல்வாக்கு அதிகரிப்பை வைத்து தேர்தல் நடத்தினால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்பது கணிப்பு. ஆனால் நரேந்திர மோடி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. கவனமாக செயல்பட்டு வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்