முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகரை கேலி செய்து ஆஸ்திரேலியாவில் நாடகம்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மெல்போர்ன்,செப். 21 - ஆஸ்திரேலியாவின் தலைநகர் மெல்போர்னில் வரும் 29 ம் தேதி திருவிழா நடக்கிறது. அதில் நடக்கும் ஒரு காமெடி நாடகத்தில் இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் விநாயகரை கைது செய்யும் ஹிட்லரின் நாஜி உளவுத் துறை அவரிடம் விசாரணை செய்து துன்புறுத்துவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன் ஷேக் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்லரின் உளவுத் துறை கைது செய்து விசாரிப்பது போன்று அமைத்திருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகும். விநாயகரை கோயில்கள் மற்றும் வீடுகளில் வைத்து பூஜிக்க வேண்டுமே தவிர மேடைகளில் ஏற்றி கேலி செய்து சிரிக்கக் கூடாது. அவர் கேலிப் பொருள் அல்ல. அவர் இந்துக்களால் வழங்கப்படும் முழு முதற்கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ்நாஸ் கூறும் போது, இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கமல்ல. மக்களை மகிழ்விப்பதற்காகவே நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாண்டிருக்கிறோம் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது இது முதல் தடவையல்ல. சமீபத்தில் பெண் கடவுள் மாகலெட்சுமியை நீச்சல் உடையில் வைத்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புக்கள் போராட்டம் நடத்திய பின் அந்த காட்சி வாபஸ் பெறப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்