முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமாக முடிந்தது செளர்யா ஏவுகணை சோதனை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பலசூர்(ஒரிசா),செப்.- 26 - அணுகுண்டுகளை தாங்கி செல்லும் திறன் பொருந்திய செளர்யா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.  தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கவல்ல செளர்யா ஏவுகணை ஒரிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது. தரைக்கு அடியில் உள்ள மறைவிடத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை குறித்த இலக்கை குறித்த நேரத்தில் தூக்கி அழித்தது. இது செளர்யா ஏவுகணையின் 2 வது வெற்றிகரமான சோதனையாகும். இதற்கு முன்பாக கடந்த 2008 நவம்பர் 12 ம் தேதி இது சோதிக்கப்பட்டது. இந்த இரண்டாவது சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று பாதுகாப்புத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கையாளுது மற்றும் இடம் மாற்றுவதற்கு சுலபமானதாகவும், எளிமையானதாகவும் மற்றும் செலுத்து வாகனத்தில் பொருத்துவதற்கு ஏதுவானதாகவும் இருப்பது இதன் சிறப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

நவீன தொழில்நுட்பம் பொருத்திய இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணு வெடி பொருட்களை 750 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று இலக்கை தாக்கவல்லது. இது இரண்டு அடுக்கு திட எரிபொருளை கொண்டது. இது நிலத்தில் இருந்து மட்டுமின்றி, நீர் மூழ்கி கப்பலில் இருந்தும் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பும் மேலடுக்கும் சுலபமாக நீர்மூழ்கியில் பொருந்துகிறது என்று செளர்யா தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். 

முன்னதாக ஏவுகணை செலுத்தப்படுவதற்கு முன்பு செலுத்து தளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 400 குடும்பங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகம் அருகில் உள்ள முகாமுக்கு மாற்றியிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்