முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.பி. பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.- 26 - வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரமோத் திவாரி என்பவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட இந்த இசட் பிளஸ் பாதுகாப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1985 ம் ஆண்டு சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அடிப்படையில் இந்த எம்.எல்.ஏ.வுக்கு இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு 26 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்கூட சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும்கூட இந்த பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு இந்த பாதுகாப்பை தொடர்ந்து அளிக்கலாமா வேண்டாமா என்பதை மத்திய அரசு ஆய்வே செய்யவில்லை. இந்த எம்.எல்.ஏ.வுக்கு சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய பாதுகாப்பு வாகனங்களுடன் 50 பாதுகாவலர்கள் அடங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வசதி உள்ளூர் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலையும், அசெளகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மனுதாரர்  அபைசிங்

தனது மனுவில் தெரிவித்து உள்ளார். எனவே வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த மனுதாரரின் மனுவை பொதுநல மனுவாக ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்