Idhayam Matrimony

இந்தியா- வங்காளதேசம் இடையே 6 நாள் பேச்சுவார்த்தை துவங்கியது

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

டாக்கா, செப்.- 26 - இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் 6 நாள் பேச்சுவார்த்தை நேற்று டாக்காவில் துவங்கியது.  இந்தியாவிற்கம் வங்காளதேசத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் தீரிரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஊடுருவல் இருந்துவருகிறது. வங்காள தேசத்தில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி நாச வேலைகளைச் செய்ய முயற்சி செய்கின்றனர். இதேபோல வடகிழக்கு மாநிலங்களில் உள்ள உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் வங்காள தேசத்திற்குள் ஊடுருவி அங்கு தீவிரவாத பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துவருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்க இரு நாடுகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டத்திலான 6 நாள் பேச்சுவார்த்தை நேற்று டாக்காவில் துவங்கியது. இந்தியாவின் சார்பில் எல்லைப் பாதுகாப்பு படை டைரக்டர் ராமன் ஸ்ரீவத்சவா தலைமையில் 21 அதிகாரிகள் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்ேகேற்றுள்ளது. வங்காளதேசத்தின் சார்பில் அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைவர் மேஜர் ஜெனரல் அன்வர் உசேன் தலைமையிலான பாதுகாப்பு துறை பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் வங்காள தேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு குறித்து வங்காள தேச தலைவர்களுடன் இவர்கள் இருவரும் பேச்சுநடத்தினர். இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த 6 நாள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இப்போது துவங்கியுள்ளது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது, 24 மணி நேர ரோந்துப்பணியை மேற்கொள்வது ஆகியவற்றில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை அளிப்பது குறித்து இந்த 6 நாள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும். அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டு  செயலாக்கம் செய்யப்படும். இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே 4096 கி.மீ. நீளத்திற்கு எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இதற்கு முன்பு இதேபோன்ற பாதுகாப்புதுறை மட்டத்திலான இரு நாட்டு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்