முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 3 பேர் மீது சி.பி.ஐ.புதியவழக்கு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி. செப். - 27 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்ட 3 பேர் மீது  அரசு  பணியாளர்கள் நம்பிக்கை மீறல் சட்டதின் கீழ் சி.பி. ஐ. புதிய  வழக்கு ஒன்றை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆ.ராசா உள்ளிட்ட 3பேருக்கும் ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறைத்தண்டனையோ கிடைக்கலாம் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது  முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த்த பெகூரா,  கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி ( எம்.பி. ) ஆகியோர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு  டெல்லி திகார் சிறையில் அடைக்கப்ட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஆஜரான  சிறப்பு  அரசு வழக்கறிஞர் யு.யு. லலித் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்   ஆ.ராசா , அவரது முன்னாள் தனி செயலாளர்  ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலை தொடர்பு துறை  செயலாளர் சித்தார்த் பெகூரா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் ( இ.பி. கோ. ) 409 வது பிரிவின் கீழ்  நம்பிக்கை மோசடி கிரிமினல் வழக்கு  பதிவு செய்ய உள்ளதாகவும் அதற்கு கோர்ட்டு அனுமதிக்கவேண்டும் என்றும் லலித் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகள் மற்றும் 3 தொலை தொடர்பு  நிறுவனங்கள் மீதும்  இ.பி.கோ. 120  பிரிவின் கீழ் ( கிரிமினல் சதித்திட்டம் ) வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் லலித் வாதாடினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 1, ( ராஜா) 2. ( பெகூரா), 3 ( சந்தோலியா ) ஆகியோர் அரசு பணியாளர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு அரசு பொறுப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் இவர்கள் மூவரும் அந்த நம்பிக்கையை மீறியிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது புதிதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என்றும் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் லலித் கேட்டுக்கொண்டார்.
மேலே கூறப்பட்டுள்ள இந்த 3 குற்றவாளிகளும் தங்களது மதிப்பு மிக்க பணிகளை மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து சட்ட விரோதமாக  பயன்படுத்தியிருக்கிறார்கள்.  மேலும் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா,( 4 வது குற்றவாளி ) ,  வினோத் கோயங்கா (5),  ஸ்வான் டெலிகாம் ( 6), யுனிடெக் நிர்வாக இயக்குனர்  சஞ்சய் சந்திரா ( 7), யுனிடெக் ஒயர்லஸ் தமிழ் நாடு லிமிடெட் )(8)  ஆகியோர் ஆதாயம் பெறுவதற்காக மேற்கண்ட 3 குற்றவாளிகளும்  சட்டவிரோதமாக  தங்களது அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் சி.பி. ஐ.  தனது மனுவில் கூறியுள்ளது.
ஆ.ராசா , சந்தோலியா, பெகூரா ஆகியோர்  10 ஆண்டு சிறை  தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய இ.பி.கோ. 409 குற்றத்தை செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளின்படி இவர்களுக்கு 7 ஆண்டுகள் வரைதான் தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புதிய பிரிவின்படி இவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டையோ அல்லது 10 ஆண்டு சிறைத்தண்டனையோ கிடைக்கலாம் என்று சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago