முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுத உதவி உளவுத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,செப்.- 27 - அசாம் மாநிலத்தில் உள்ள உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுத உதவி செய்யப் போவதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.  உல்பா தீவிரவாதிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரேஸ்பரூவா மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அவர் வெளிநாட்டு வங்கிகளில் 100 கோடிக்கும் மேலாக பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு சில வெளிநாடுகளின் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா ஆயுத உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சீன ராணுவம் 1200 நவீன ரக துப்பாக்கிகளும், ராக்கெட் லாஞ்சர்களும் கொடுத்துள்ளதை இந்திய உளவு துறை கண்டுபிடித்துள்ளது. சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடி பொருட்களை சீனா பரூவாவுக்கு கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடல் வழியாக ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டு வங்கதேசம் மூலம் அந்த ஆயுத உதவி நடைபெற்றதாக கருதப்படுகிறது. இந்த ஆயுத உதவியை பெற்று மீண்டும் உல்பா தீவிரவாதிகள் பலமடைந்துள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்