முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.க. வேட்பாளர் சைதைதுரைச்சாமி வேட்பு மனு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.- 27 -  தமிழக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுமுதல் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.  அ.தி.மு.க.  சென்னை மேயர் வேட்பாளர்கள்  சைதை துரைச்சாமி. மதுரை  மேயர்  ராஜன் செல்லப்பா  தூத்துக்குடி மேயர் சசிகலாபுஷ்பா,  திருப்பூர் மேயர்  விசாலாட்சி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.  தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. அக்டோபர் 17​ல் நடை பெறும் முதல்கட்ட தேர்தலில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்nullர், வேலூர் ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதே நாளில் 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. 2​வது கட்ட தேர்தல் நடைபெறும் 19​ந்தேதி 65 நகராட்சிகள், 270 பேரூராட்சி கள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகள் உள்ளன.   உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் கடந்த 22​ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் 10 கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. எனவே லட்சக் கணக்கில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஆனால் கடந்த சனிக்கிழமை வரை 25 ஆயிரத்து 723 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் ஞாயிறு விடுமுறை தினமாகும் . வருகின்ற 29​ந்தேதி வரை  வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.  வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே  உள்ளன.
இந்நிலையில்  அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. பா.ஜனதாவும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. க ாங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும்  வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சிகளின் விடுபட்ட பட்டியலும் வளியாகும் என்று தெரிகிறது.   நேற்று முன்தினம் வரை மந்தமாக இருந்த மனுதாக்கல் நேற்று சூடு பிடித்துவிட்டது. நேற்று அமாவாசை நல்லநாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எனவே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்வோரின் கூட்டம் அலைமோதியது. பகல் 11 மணி முதல்  வேட்பு மனுக்கள் பெறப்பட்டன என்றாலும் 12 மணிக்கு பிறகே  நல்லநேரம் என்பதால் பெரும்பாலானோர் மனுதாக்கல் செய்தனர். மாலை 3 மணி வரை ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு மனுக்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
  சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில்  வேட்பாளராக போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்து தேர்தல் அதிகாரியும், கமிஷனருமான கார்த்திகேயனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் செந்தமிழன், பாலகங்கா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், வெற்றிவேல், வளர்மதி, மாதவரம் மூர்த்தி, ராஜலட்சுமி, தொழிற்சங்க செயலாளர் அர்ஜுனன், கடும்பாடி  உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிககள் ஆகியோர்  திரண்டு வந்திருந்தனர்.   மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று மதியம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயக்குமார், மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க. மேயர்வேட்பாளர் சசிகலாபுஷ்பா, தேர்தல் அலுவலரும் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனருமான தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் மனுதாக்கல் செய்தார். திருப்nullர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் விசாலாட்சி மாநராட்சி கமிஷனர் ஜெயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அமுதா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சண்முகவேலு, சிவசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தன், பரமசிவம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
குளச்சல் நகரசபை அ.தி.மு.க. வேட்பாளர் பெலிக்ஸ் ராஜன் நேற்று அமைச்சர் பச்சைமால் முன்னிலையில் குளச்சல் நகராட்சி அலுவலத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இன்றும் மகாளய அமாவாசை  எனவே  அதிகமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29​ந் தேதியுடன் மனுதாக்கல் முடிந்து 30​ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அன்று மாலையே ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் எத்தனை பேர், யார்​ யார் என்ற விவரம் தெரிந்து விடும். மனுக்களை வாபஸ் பெற 3​ந்தேதி கடைசிநாள். அன்று வேட்பாளர்கள் பெயர் விவரம் அவர்களுடைய சின்னங்கள் ஆகியவை அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்