முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு ரகசிய குறிப்பு விவகாரம் தேவைப்பட்டால் பிரதமரை சந்தித்து- பேசுவேன்: பிரணாப்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,செப்.- 28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுவேன் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தபோது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். ப.சிதம்பரம் வற்புறுத்தி இருந்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலம் விட்டிருக்கலாம். இதன்மூலம் மத்திய அரசுக்கு பெரும் ஏழப்பு ஏற்பட்டதையும் தடுத்திருக்கலாம் என்று பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ரகசிய குறிப்பை அனுப்பியுள்ளது. இந்த குறிப்பை தற்போது நிதி அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி பார்த்த பின்னர்தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரமும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனையொட்டி சோனியா காந்தியை ப.சிதம்பரம் தனியாக சந்தித்து பேசினார். அதனையடுத்து சோனியாவை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் இன்று முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. இந்தநிலையில் கொல்கத்தா வந்த முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியது குறித்து பிரதமருடன் சந்தித்து பேசிய பின்னர்தான் எதுவும் கருத்து கூறுவேன் என்றார். இதுவிஷயமாக நியூயார்க் மற்றும் டெல்லியில் நான் கூறியதைத்தான் இப்போதும் கூறுகிறேன். அதாவது ரகசிய குறிப்பு குறித்து பிரதமர் மற்றும் என்னுடைய சக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பின்னர்தான் கருத்து எதுவும் கூறுவேன். அதற்கு முன்பு எதுவும் கூறமாட்டேன் என்று முகர்ஜி தெரிவித்தார். முகர்ஜியும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கை நியூயார்க் நகரில் சந்தித்து பேசினார். கடந்த செவ்வாய் கிழமை அவர் புதுடெல்லி திரும்பினார். நியூயார்க் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முகர்ஜி, ப.சிதம்பரம் என்னுடைய எனது மதிப்புமிக்க சக அமைச்சர். அதனால் சிதம்பரம், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பல அமைச்சர்களை சந்தித்து பேசிய பின்னர்தான் ரகசிய குறிபபு குறித்து எனது கருத்தை தெரிவிப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்