முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜான் நினைவு அகில இந்திய வாலிபால் எஸ்.டி.ஏ.டி. ஆண்கள் அணி சாம்பியன்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, அக்.- 10 - சென்னையில் நடந்த பி.ஜான் நினைவு அகில இந்திய வாலிபால் போட்டியின் ஆண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை எழும்பூரில் உள்ள நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து,  பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் பி.ஜான் நினைவு 39​வது அகில இந்திய வாலிபால் போட்டியை சென்னை எழும்nullரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடத்தியது. பெண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டங்களில் மத்திய ரெயில்வே 25-​23, 25-​20, 25-​23 என்ற செட் கணக்கில் மேற்கு ரெயில்வேயையும், தெற்கு ரெயில்வே அணி 25-​23, 25-20, 25-18 என்ற செட் கணக்கில் கேரள மின்வாரிய அணியையும் தோற்கடித்தன. பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே அணியும்​மத்திய ரெயில்வே அணியும் மோதுகின்றன. 20 அணிகள் பங்கேற்ற ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் டிரிபிள்ஸ் (3 பேர்) முறையில் நடந்தன. ஆண்கள் அணிகளுக்கு நடந்த இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. `ஏ'​மற்றும் ஐ.சி.எப். `ஏ' அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி `ஏ' அணி 25​-23, 25​-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3​வது இடத்திற்கான ஆட்டத்தில் சென்ட்ரல் எக்சைஸ் அணி (ஆந்திரா) அணி 25​-18, 25-​20 என்ற நேர் செட்டில் கேரள மின்வாரிய `ஏ' அணியை வீழ்த்தியது.
ஆண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையுடன் டாக்டர் ஜி.டி. போஸ் நினைவு கோப்பையை வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரை கண்ணன், போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு ஆகியோர் வழங்கினர். பரிசளிப்பு விழாவில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சி.சக்திகுமார், எஸ்.என்.ஜே. நிறுவன சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன், வேல்ஸ் பல்கலைக்கழக இணைவேந்தர் எஸ்.கமலக்கண்ணன், போஸ் நினைவு மருத்துவமனை இயக்குனர் அஜித் போஸ், கே.மகாலட்சுமி, போட்டி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுச்ங்ங்நீஸஹங்ங்
சென்னையில் நடைபெற்ற பி.ஜான் நினைவு அகில இந்திய வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.டி.ஏ.டி. அணிக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக்கண்ணன், போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு ஆகியோர் பரிசு வழங்கியபோது எடுத்தபடம். அருகில் சித்திரைப்பாண்டியன் இருக்கிறார்.

ஹசுஷ ஷச்சீஙுஙூடீ கிஙுச்சீஙீ ஙீகீச்சிச்
ஏ.வி.சி. எனப்படும் ஆசிய வாலிபால் கான்பெடரேஷன் சார்பில் சர்வதேச வாலிபால் நடுவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. 15 நாடுகளில் இருந்து 30 நடுவர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சி முகாமில் ஏ.வி.சி.நடுவர்கள் கமிட்டி சேர்மன் முகமது ஹபிப் அலி, செயலாளர் சோங்காக் சிரியோன்போ ஆகியோர் கலந்துகொண்டு வாலிபால் விளையாட்டின் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள நடுவர்களை படத்தில் காணலாம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்