முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டி டெண்டுல்கர் இல்லாமல் வென்றது மிகப் பெரிய சாதனை - ஹர்பஜன் சிங்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக். - 11  - சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 போட்டியில் டெண்டுல்கர் பங்கேற்காம ல் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது மிகப் பெ ரிய சாதனை என்று கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார். சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் சென்னையில் நடந்தது. இதில் மும்பை அணி 31 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. பரபரப்பான இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. பிராங்ளின் 29 பந்தி ல் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்னும், யாதவ் 17 பந்தில் 24 ரன்னும் எடுத்தனர். பட்கல் 3 விக்கெட்டும், வெட்டோரி 2 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.  பின்னர் விளையாடிய பெங்களூர் அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் தருவதாக இருந்தது. கடந்த 2 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் இலக்கை எடுக்க முடிந்த அந்த அணியால் 140 ரன் இலக்கை எடுக்க முடியாமல் போனது பரிதாபமே.  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.3 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் தில்ஷான் 18 பந்தில் 27 ரன் எடுத்தார். அதிரடி பே ட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 5 ரன்னே எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் தர ப்பில் கேப்டன் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டும், மலிங்கா, அபு அகமது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  ஆட்டநாயகனாக ஹர்பஜன் சிங்கும் தொடர் நயாகனாக  மலிங்காவு ம் தேர்வு பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ. 12 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தைப் பிடித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ. 6.24 கோடி கிடை த்தது. 

டெண்டுல்கர், ரோகித் சர்மா, முனாப் படேல் போன்ற முன்னணி வீர ர்கள் இல்லாமலேயே மும்பை அணி கோப்பையை வென்று முத்தி ரை பதித்தது. இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் சிங் கூறியதாவது - 

இந்தப் போட்டி தொடங்கியவுடன் பெரும்பாலோர் எங்கள் அணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்கள். டெண்டுல்கர், ரோகித் சர்மா, முனாப் படேல் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலும் எங்களால் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. 

டெண்டுல்கர் இல்லாமல் கோப்பையை வென்றது மிகப் பெரிய சாத னையாக கருதுகிறேன். பெங்களூர் அணியில் எங்களது இலக்கு கெய்ல், தில்ஷான், விராட் கோக்லி, இந்த 3 பேரையும் எளிதில் அவுட் செ ய்து விட்டால் வெற்றியை  பெறலாம் என்று திட்டமிட்டு ஆடினோம். அதற்கு ஏற்ற பலன் கிடைத்தது. 

இந்தத் தொடரில் மலிங்காவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. அபு அகமதுவும் பந்து வீச்சில் ஹீரோவாக திகழ்ந்தார். இவ் வாறு மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங் கூறினார். 

தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி கூறியதாவது - 140 ரன் என்பது எடுக்கக் கூடிய இலக்கு தான். இதை எடுக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. 

பெங்களூர் ஆடுகளத்துக்கும், சேப்பாக்கம் ஆடுகளத்துக்கும் நிறைய வே வேறுபாடு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்