முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பந்துகள் அறிமுகமாவதால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக். 14 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2 பந்துகள் அறிமுகமாவதால் எனக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது என்று தமிழக சுழற் பந்து வீரரான அஸ்வின் தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த 20 ஆண்டுகாலமாக ஒரு பந் து மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி 2 பந்துகள் பயன்படுத்த ப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நடைமுறை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை யே இன்று நடைபெறவுள்ள போட்டியில் இருந்து தொடங்குகின்றது. அதாவது முதல் 50 ஓவர்களுக்கு ஒரு பந்தும், அடுத்த 50 ஓவர்களுக்கு இன்னொரு பந்தும் பயன்படுத்தப்படும். 

இப்படி 2 பந்துகள் பயன்படுத்தப்படுவதால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்படும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளார்கள். பந்து பளபளப்புடன் இருக்கும் போது, வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாத கமாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

பந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கேவகமாக செல்லும் என்பதால் இது மட்டை வீரர்களுக்கும் பயனுள்ளாதாக இருக்கும் என்று இன் னொரு தரப்பினர் சொல்கின்றனர். 

அதே நேரத்தில், சுழற் பந்து வீச்சுக்கும், சாதகமாக அமையும் என 3 - வது தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் தனக்கு எந்த பாதிப்பும் வராது என்று தமிழக சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியு ள்ளார். 

இவர், ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தி ய அணி, மேற்கிந்திய தீவுக்கு சென்றிருந்த போதும் இடம் பெற்று இருந்தார். இப்போதும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஐதராபாத்தில் இன்று நடக்க இருக்கும் போட்டியிலும் பந்து வீசுவார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஐதராபாத் போட்டி குறித்து அவர் கூறயதா வது - இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வியை நினைத்து பயன் இல்லை. அதை மறந்து விட வேண்டும். 

இனி அடுத்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். ஒரு நாள் போட்டியில் 2 பந்துகள் அறிமுகப் படுத்தப்பட இருக்கின்றன. இதை நான் புதுமையாக நினைக்கவில் லை. 

வெள்ளைப் பந்து அறிமுகப்படுத்தப்படுவதால், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்ற கூற்றையும் நான் நம்பவில்லை. சூழ்நி லைக்கு ஏற்ப பந்து வீசினாலே போதும். இவ்வாறு அஸ்வின் தெரிவி த்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்