முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், அக். 14 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்தப் போட்டி பக லிரவு ஆட்டமாக நடக்கிறது.  இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையில் இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி ஆகி யவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. 

இந்திய அணி சமீபத்தில், இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற வில்லை. டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்தது. பின்பு நடந்த ஒரு நாள் தொடரை 0 - 3 என்ற கணக்கில் இழந்தது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோல்வி அடைந்தது. 

இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்கு தோனி தலை மையிலான இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி தற்போது நல்ல பார்மில் உள்ளது. எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்தத் தொடருக்கு முன்பு இங்கிலாந்து அணி விளையாடிய 2 பயிற்சி ஆட்டத்திலும் ஐதராபாத் லெவனை வீழ்த்தியது. முதல் பயிற்சி ஆட்ட த்தில், 56 ரன்னிலும், 2 -வது பயிற்சி ஆட்டத்தில் 253 ரன்னிலும் வெற் றி பெற்று இருந்தது. 

டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ஜாஹிர்கான் போன்ற முன்ன ணி வீரர்கள் இந்தத் தொடரிலும் ஆடவில்லை. ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்து பயணத்திலும் விளையாடவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடாத காம்பீர் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் 3 -வது வீரராக விளையாடலாம் என்று கூறப்படுகிறது. பார்த்தீவ் படேலும், ரகானேவும் தொடக்க வீர ர்களாக களம் இறங்கலாம். 

ஒரு வேளை பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், காம்பீ ரும், ரகானேவும் தொடக்க வீரர்களாக ஆடலாம். மிடில் ஆர்டரில் விராட் கோக்லி, ரெய்னா, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா உள்ளனர். 

வேகப் பந்து வீரர்களில் பிரவீன் குமார், வினய்குமார், அரவிந்த் அல் லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம். சுழற் பந்து வீரர்களில் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்பஜன் சிங் இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆடவில்லை. 

இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப் டன் குக், கீஸ்வெட்டர் பேர்ஸ்டோவ், பீட்டர்சன், டிராட், பெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

தவிர, பந்து வீச்சைப் பொறுத்தவரை, பிரஸ்னன், ஸ்வான் போன்ற சிறந்த பெளலர்கள் உள்ளனர். ஆனால் முன்னணி வீரர்களான ஆண்டர் சன், பிராட் ஆகியோர் பங்கேற்கவில்லை. கடந்த பயணத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை மிரட்டியது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணி கடைசியாக 2008 - 09 ம் ஆண்டு இந்தியா வந்து விளையாடிய போது, இந்தியா தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற் றி பெற்றது. அதே போல இந்திய அணி தற்போது 5 ஆட்டத்திலும் வென்று பதிலடி கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் பகல் இரவாக ஐதராபாத்தில் நடக்கிறது. பிற்பகல் 2. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்ஷனில் இருந்து போட்டி நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), காம்பீர், ரகானே, விராட் கோக் லி, ரெய்னா, மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், அரவிந்த், வருண் ஆரோன், பார்த்தீவ் படேல், ராகுல் சர்மா, வினய் குமார், மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர். 

இங்கிலாந்து அணி : - அலிஸ்டார் குக் (கேப்டன்), ஜானி பேர்ஸ் டோ, இயான் பெல், கீஸ்வெட்டர், பீட்டர்சன், டிராட், ஸ்டீவன் பின், சுமித் படேல், டெர்ன்பேச், ஸ்டூவர்ட் மேக்கர், பட்லர், பிரெஸ்னன், சுவான், வோக்ஸ், அலெக்ஸ் ஹால்ஸ் மற்றும் ஸ்காட் போர்த்விக் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்