முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு டாக்டர் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.18 - பிரபல இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமிதாப்பச்சனின் சிறப்பான கலைப்பணியை பாராட்டும் வகையில் அவருக்கு இங்கிலாந்து நாட்டில் லீஸ்டர் நகரில் உள்ள மான்போர்ட் பல்கலைக்கழகம்,  இந்தியாவில் உள்ள ஜான்சி பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்கனவே கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. 

இந்த கவுரவ டாக்டர் பட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அப்போது ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அதை கண்டிக்கும் வகையில் அந்த டாக்டர் பட்டத்தை வாங்க அமிதாப் மறுத்து விட்டார்.

ஆனால் இப்போது இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் நின்றுள்ளதால் இந்த டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொள்ளுமாறு பிரிஸ்பேன் நகரில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் அமிதாப்பை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வேண்டுகோளை ஏற்று கேளிக்கை உலகிற்கு தான் ஆற்றிய சிறப்பான தொண்டிற்காக இந்த பட்டத்தை வாங்கிக்கொள்ள அமிதாப் சம்மதித்துள்ளார்.

அதன்படி வருகிற 20-ம் தேதி பிரிஸ்பேன் நகரில் இந்த டாக்டர் பட்டம் அமிதாப்பிற்கு வழங்கப்படுகிறது. இது இவருக்கு கிடைக்கும் நான்காவது கவுரவ டாக்டர் பட்டமாகும்.

இது தனக்கு கிடைக்கும் 4 வது டாக்டர் பட்டம் என்றும் தான் தனது பெயருக்கு முன்னாள் டாக்டர்  என்று போட்டுக்கொள்வதை ஒரு போதும் விரும்பியதில்லை என்றும் அந்த டாக்டர் பட்டத்திற்கு உரியவர் தனது தந்தைதான் என்றும் அமிதாப் ஒரு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்பச்சன் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஹாலிவுட் படமான தி கிரேட் கோட்ஸ்பி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படப்பிடிப்பு முடிந்ததும் தான் 20 ம் தேதி பிரிஸ்பேன் நகருக்கு சென்று குயின்ஸ்லாந்து பல்கலை தரும் அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை  வாங்க இருப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago