முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களிடம் நோபால் வீசுமாறு கூறவில்லை: சல்மான்பட்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், அக். 18 - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், மொகமது ஆமிர், மற் றும் மொகமது ஆசிப் ஆகியோர் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தி ல் ஸ்பாட் பிக்சிங் எனும் சூதாட்டத்தி ல் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர்கள் சூதாட்ட த்தில் ஈடுபட்டனர். இதற்காக ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் நடைபெ ற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சூதாட்ட தரகர் மஜித் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருந்தார். 

இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் தனக்கு தொடர்பு இருந்ததாக தெரிவித்தார். அவரது இந்த அபாண்டமான புகாருக்கு இருவரும் கடுமையாக மறுப்பு தெரிவித்தனர். 

இதே போல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங், மற்றும் வேகப் பந்து வீச்சாளர் நாதன் பிரேக்கன் ஆகியோரது பெய ரையும் தெரிவித்து இருந்தார். இதை இருவரும் மறுத்து இருந்தனர். 

ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய வேகப் பந்து வீரர்களான மொகமது ஆசி ப்பும், மொகமது ஆமிரும் வேண்டுமென்றே நோபால் வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இருவரும் சூதாட்ட தரகரிடம் பணம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் நோபால் வீசியதாக கூறப்பட்டது. 

டெஸ்ட் கேப்டன் சல்மான் பட் கூறியபடி இருவரும் அப்படி நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மொகமது ஆமிர், மொக மது ஆசிப் ஆகியோரை நோபால் வீசுமாறு தான் எதுவும் கூறவில் லை என்று சல்மான் பட் கோர்ட்டு விசாரணையில் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக கோர்ட்டில் அவர் கூறியதாவது - மொகமது ஆசிப் பிடமோ அல்லது மொகது ஆமிரிடமோ நான் ஒரு போதும் ஏமாற்று வேளையில் ஈடுபடுமாறு கூறவில்லை. முன் கூட்டியே திட்டமிட்டு நோபால் வீசுமாறு நான் எதுவும் அவர்க ளிடம் கூறவில்லை. எந்த ஒரு நபரையும் எனது நாட்டுக்காக ஏமாற்று மாறு கூறவில்லை. நாட்டுக்காக ஆடுவதில் பெருமைப்பட்டேன். 

கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் ஆடியுள் ளேன். இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்பட்டது இல்லை. இவ்வாறு சல்மான்  பட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago