முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் தோனியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 18 - இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் கேப்டன் தோனியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப் டனான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்து இருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவருமான துலீப் வெங்சர்க்கார் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது -  இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு ஐதராபாத் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா முற்றுப் புள்ளி வைத்தது. இது இந்திய அணிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

இந்த ஆட்டத்தில் தோனி திறமை அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. இந்த வெற்றி மூலம் அவர் நம்பிக்கையை ஏற்படு த்திக் கொடுத்தார். அவர் அதிரடியாக ஆடி ரன் குவித்தது பாராட்டத்த க்கது. 

இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் தோனி திட்டமிட்டு விளையாடினார். கணக்கீட்டு அடிப்படையில் விளையாடி அணியை முன்னிலை ப் படுத்தினார். 

அணியில் உள்ள இளம் வீரர்கள் தோனியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நாள் போட்டியை விட ரசிகர்கள் 20 ஓவர் போட்டி யை மிகவும் அதிகமாக ரசிக்கிறார்கள். 

20 ஓவர் போட்டி ஒரு நாள் ஆட்டத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக் கிறது. ஒரு நாள் போட்டி தற்போது விமர்சிக்கப்படும் நிலைக்கு வந் து விட்டது. மிடில் ஓவர்களே மிகவும் சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது. 

குறிப்பிட்ட ஓவர்களில் பவர்பிளே என்பதை சர்வதேச கிரிக்கெட் கவு ன்சில் (ஐ.சி.சி.) அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு வெங்சர்க் கார் கூறியிருக்கிறார். 

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ஒட்டு மொத்தத்தில் வாஷ் அவுட்டானது. முன்னதாக நடந்த டெஸ்ட் தொட ரை 2 - 0 என்ற கணக்கில் இழந்தது. 

இதனைத் தொடர்ந்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொட ரின் முடிவில் 3 - 0 என்ற கணக்கில் தோற்றது. இடையே நடந்த ஒரே ஒரு டி - 20 போட்டியிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்