முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் தோனி காம்பீர் - கோக்லிக்கு பாராட்டு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 19 - இங்கிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அதிரடியாக ஆடி உதவிய கெளதம் காம்பீர் மற் றும் விராட் கோக்லிக்கு கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்து இருக் கிறார். 

இந்திய அணியில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத் திறனை வெளி ப்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றும் இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் மனம் திறந்து பாரட்டி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 2 -வது ஒரு நாள் போட்டியில் விராட் கோ க்லி, காம்பீர் அதிரடியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 48.2 ஓவரில் 237 ரன்னில் சுருண்டது. பீட்டர்சன் 46 ரன்னும், பொபாரா 36 ரன்னும், சுமித் படேல் 42 ரன்னும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான வினய் குமார் 30 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட் எடுத்தார். தவிர, அஸ்வின், ஜடேஜா மற்றும் பிர வீன் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய இந்திய அணி 36.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து வெற்றிக்கான இலக்கை எளிதில் எடுத்தது. 3 -வது விக்கெட்டான காம்பீர் - விராட் கோக்லி ஜோடி மிகவும் அபாரமாக விளையாடி அணியை எளிதில் வெற்றி பெற வைத்தது. 

பொரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் விராட் கோக்லி 98 பந்தில் 16 பவுண்டரியுடன் 112 ரன்னும், கா ம்பீர் 90 பந் தில் 10 பவுண்டரியுடன் 84 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தது நினைவு கூறத்தக்கது. 

டெல்லியைச் சேர்ந்த காம்பீரும், விராட் கோக்லியும் உள்ளூர் மை தானத்தில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர். இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியதா வது - 

இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர் கள் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

238 ரன் இலக்கு என்பது மிகவும் கடினமானது இல்லை. காம்பீர் - கோக்லி இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியத்துவம் பெற் று இருந்தது. இருவரும் புத்திசாலித் தனத்துடன் அபாரமாக விளை யாடினார்கள். 

3 -வது வீரராக சென்ற காம்பீர் நிலைத்து நின்று ஆடியது முக்கிய அம் சமாகும். கோக்லியின் ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். 

238 ரன் இலக்கை மிகவும் எளிதாக எடுத்தது திருப்தி அளிக்கிறது. ரன் இலக்கை எடுக்கும் இந்திய வீரர்களின் திறமை மேம்பட்டு உள்ளது. இவ்வாறு கேப்டன் தோனி கூறியுள்ளார். 

தொடர்ந்து 2 -வது போட்டியிலும் தோற்றதால் இங்கிலாந்து கேப்டன் குக் கவலை அடைந்து உள்ளார். அவர் இது தொடர்பாக கூறியதாவது - 2 போட்டியிலும் எங்களது அணி மிகவும் மோசமாக தோற்றது கவ லை அளிக்கிறது. 

கோக்லி - காம்பீரின் ஆட்டத்தை எங்களது பெளலர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தியா வருவதற்கு முன்பு நாங்கள் இந்தத் தொடருக்காக நல்ல தயார் நிலையில் இருந்தோம். 

இங்குள்ள ஆடுகள தன்மையால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய போது திணறியது. தற்போ து நாங்கள் திணறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியா - இங்கி லாந்து மோதும் 3 -வது ஒரு நாள் போட்டி வருகிற 20 -ம் தேதி (வியா ழக்கிழமை ) மொகாலியில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago